Home / இந்திய செய்திகள் / கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் கட்டட விபத்து-மூவர் சடலாக மீட்பு!!

கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் கட்டட விபத்து-மூவர் சடலாக மீட்பு!!

கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் ஏற்பட்ட கட்டட விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்ததுடன் 56 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் புதிதாக தனியார் வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த வணிக வளாக கட்டடம் 5 மாடிகளை கொண்டது ஆகும்.

தரைதளம் மற்றும் முதல் மாடி கட்டட பணிகள் முடிந்து அங்கு பல கடைகள் இயங்கி வந்தன. இந்த நிலையில் நேற்று அந்த வணிக வளாகத்தின் கட்டட பணியில் தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தபோதே நேற்று மாலை 4 மணி அளவில் குறித்த கட்டம் இடிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகவளாக கடைகளில் இருந்தவர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து அங்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்ட, தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினருக்கும் 3 பேரை உயிரிழந்த நிலையில் சடலாக மீட்டுள்ளதுடன், 56 பேரை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியாசலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கிய ஏனையோரை மீட்கும் நடவடிக்கைகள் முன்முரமாக முன்னெடுக்கப்பட்டு விருகின்றது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், வருகிற திங்கள் கிழமை முதல் அபராதம் விதிக்க ...

%d bloggers like this: