Home / உலகச் செய்திகள் / கருப்புச் சட்டை அணிந்து லட்சக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு, போராட்டம்

கருப்புச் சட்டை அணிந்து லட்சக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு, போராட்டம்

ஹாங்காங் தலைவரை பதவி விலக கோரி, லட்சக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு, கருப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்..

ஹாங்காங் வாசிகளை, சீனாவிற்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத்தை எதிர்த்து, ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை அடுத்து, சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் தலைவர், அச்சட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்தார். அதனை நிரந்தரமாக வாபஸ் பெற வலியுறுத்தியும், ஹாங்காங் தலைமை நிர்வாக தலைவராக கேரி லாம் பதவி விலக வலியுறுத்தியும், லட்சக்கணக்கானோர், பேரணியாகச் சென்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்டோரியா பூங்காவில் இருந்து தொடங்கிய பேரணி, மத்திய ஹாங்காங்கை அடைந்தது. அங்குள்ள நடுவண் அரசு அலுவலகங்களுக்கு, வெள்ளைநிற கார்னேசன் மலர்கொத்துக்களுடன் படையெடுத்த போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். போராட்ட நிகழ்வின் ஒட்டுமொத்த பதிவை படம்பிடித்த ராய்ட்ர்ஸ் நிறுவனம், வேகவேகமாக நகரும் காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டிருக்கிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

கட்டடம் இடிந்து விழுந்ததில், 6 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட  7 பேர் பலி!!

இமாச்சலப் பிரதேசத்தில் சோலான் எனுமிடத்தில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், 6 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட  7 பேர் ...

%d bloggers like this: