Home / உலகச் செய்திகள் / கப்பலின் கேப்டனின் திறமையால் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து!!

கப்பலின் கேப்டனின் திறமையால் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து!!

இத்தாலியில் புயலில் சிக்கிய சொகுசுக் கப்பல் ஒன்று தள்ளாடிச் சென்று மற்றொரு படகில் மோதவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வெனிஸ் நகரத்தில் கடும்புயல் காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது.

அப்போது துறைமுகத்திற்குள் கோஸ்ட்டா டெலிஸியோஸா என்ற சொகுசுக் கப்பல் நுழைந்தது. புயல் காற்று காரணமாக அலைக்கழிக்கப்பட்ட அந்தக் கப்பல் காற்றின் வேகத்தில் தள்ளிச் செல்லப்பட்டது.

அப்போது துறைமுகத்தின் மறுபுறம் மற்றொரு பயணிகள் படகு வந்து கொண்டிருந்தது. இழுத்துச் செல்லப்பட்ட கோஸ்ட்டா டெலிஸியோஸா கப்பல் எதிரே வந்த படகு மீது மோதுவது போல சென்றது.

ஆனால் கப்பலின் கேப்டனின் திறமையால் கோஸ்ட்டா டெலிஸியோஸா நூலிழையில் விலகிச் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

2ஆவது முறையாக மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராகிறார்

கனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ...

%d bloggers like this: