Home / உலகச் செய்திகள் / கனடா பிரதமர் இலங்கை அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை!!

கனடா பிரதமர் இலங்கை அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை!!

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளால் நம்­பக்­கூ­டிய வகை­யி­லான பொறுப்­புக் கூறல் பொறிமு­றைமை ஒன்றை இலங்கை அரசு நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும். பன்­னாட்டு மற்­றும் உள்­நாட்டு ரீதி­யில் அளிக்கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறைவேற்­றும் வகை­யில் இந்த பொறுப்­புக் கூ­றல் பொறிமுறைமை அமையப் பெற வேண்­டும். இவ்­வாறு கனே­டிய தலைமை அமைச்­சர் ஜஸ்­ரின் ட்ரூடே தெரி­வித்­துள்­ளார்.

இலங்­கை­யில் போர் நிறை­வுக்­குக் கொண்டு வரப்­பட்டு பத்து ஆண்­டு­கள் பூர்த்தி­யா­வதை முன்னிட்டு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் இவ்­வாறு வலியுறுத்­தி­யுள்­ளார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

26 ஆண்­டு­க­ளாக நீடித்து வந்த போர் பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்­டது. முள்­ளி­வாய்க்­கா­லில் இறுதிக்கட்டப்போரின் போதும் அதற்கு முன்­ன­ரும் பல்லாயிரக் கணக்­கான மக்­கள் கொல்­லப்­பட்­ட­து­டன், பல்­லா­யி­ரக் கணக்­கா­ன­வர்­கள் இடம்பெயர்ந்துள்ளார்­கள். போர் நாடு முழு­வ­தி­லும் ஆறாக் காயங்­களை ஏற்படுத்­திச் சென்றுள்ளது.

கடந்த ஒரு தசாப்த கால­மாக போரில் பாதிக்­கப்­பட்ட தமிழ் கனே­டி­யர்­கள் பலரை நான் தனிப்பட்ட ரீதி­யில் சந்­தித்­துள்­ளேன். அவர்­க­ளின் வலி­கள் வேதனை­களை கேட்­ட­றிந்து கொண்டுள்­ளேன்.
தமிழ்க் கனே­டி­யர்­க­ளு­டான சந்­திப்­புக்­க­ளின் ஊடாக இலங்­கை­யில் சமாதானத்தை­யும், நல்லிணக்­கத்­தை­யும் நிலை­நாட்­டு­வது மிக நீண்ட பய­ணம் என்­ப­தனை புரிந்து கொண்­டேன்.

போர் கார­ண­மாக சொந்­தங்­களை இழந்த, பல்­வேறு வழி­க­ளில் இழப்­புக்­களை எதிர்­நோக்­கிய மற்­றும் பாதிப்­புக்­குள்­ளான அனை­வ­ருக்­கும் கனே­டிய அரசுசார்பில் ஆழ்ந்த இரங்­கல்­க­ளை­யும் வருத்­தத்­தை­யும் வெளி­யிட்­டுக் கொள்­கின்­றேன்.

அண்­மை­யில் உயிர்த்த ஞாயிறு தின­மன்று இடம்­பெற்ற தீவி­ர­வாத தாக்குதல்க­ளை­யும் ஏற்றுக்கொள்ள முடி­யாது. அனைத்து மக்­க­ளும் தங்­க­ளது நம்­பிக்­கை­க­ளின் ஊடாக வழிபாடுகளில் ஈடு­ப­டக்­கூ­டிய சுதந்­தி­ரம் இருக்க வேண்­டும். கன­டா­வின் வளர்ச்­சிக்கு தமிழ் கனே­டி­யர்­கள் வழங்கி வரும் பங்களிப்­புக்­களை அனைத்து கனே­டி­யர்­க­ளும் ஏற்­றுக் கொள்­ள வேண்டும் என்றார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி அதிகாரிகளிடம் சிக்கினர்.

பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் இருந்த பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி ...

%d bloggers like this: