Home / உலகச் செய்திகள் / கனடாவில் உள்ள Longueuil நகரில் தீப்பிடித்து எரிந்த அடுக்குமாடி மூவர் 03 பரிதாபமாக பலி

கனடாவில் உள்ள Longueuil நகரில் தீப்பிடித்து எரிந்த அடுக்குமாடி மூவர் 03 பரிதாபமாக பலி

கனடாவில் உள்ள Longueuil நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு தீப்பிடித்து எரிய தொடங்கியதன் காரணமாக அங்கு மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்தனர்.

வீரர்கள் தீயை தொடர்ந்து அணைத்தப்படி இருந்த நிலையில் உள்ளிருந்த பலரும் மீட்கப்பட்டனர்.

பலர் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள பல்கனியில் இருந்து கீழே  குதித்ததில் அவர்களுக்கு எலும்புமுறிவும் ஏற்பட்டுள்ளது.

மேலும் மீட்கப்பட்ட மூன்று பேர் சுயநினைவின்றி கிடந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

குறித்த தகவலின்படி காயம் காரணமாக 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தீயை அணைக்க 80 தீயணைப்பு வீரர்கள் போராடிய நிலையில் சனிக்கிழமை மதியம் தீ முழுவதும் அணைக்கப்பட்டது.

மேலும் இது குறித்து பொலிசார் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்பில் யாரோ செய்த தவறால் தான் தீப்பிடித்துள்ளது என்றும் கெட்ட நோக்கத்துடன் யாரும் தீயை பற்றவைக்கவில்லை தீப்பிடித்ததற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

மிகப் பழமையான மசூதியின் சிதிலங்கள் கண்டுபிடிப்பு!!

இஸ்ரேலில் மிகப் பழமையான மசூதியின் சிதிலங்களை நெகவ் பாலைவனத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ரஹத் நகருக்கு அருகே உள்ள நெகவ் ...

%d bloggers like this: