Home / உலகச் செய்திகள் / கனடாவில் இலங்கையர் உள்ளிட்ட 8 பேரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை!

கனடாவில் இலங்கையர் உள்ளிட்ட 8 பேரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை!

கனடாவில் இலங்கையர் உள்ளிட்ட 8 பேரை கொலை செய்த தொடர் கொலையாளி ப்ருஸ் மெக் ஆத்தருக்கு அந்த நாட்டின் நீதிமன்றம்ஆயுள் தண்டனை  விதித்துள்ளது.

2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவர் இந்த செய்த தொடர் கொலைகளை புரிந்துள்ளார்.

67 வயதான மெக் ஆர்த்தர், ஸ்கந்தராஜா நவரட்ணம் மற்றும் க்றிஸ்ண குமார் கணகரட்ணம் ஆகிய இலங்கையர்கள் உள்ளிட்ட எட்டு பேரை கொலை செய்து, அவர் காணிப் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இடங்களில் அவர் புதைத்திருந்தார்.

இந்த தகவல் குறித்து கிடைக்கப்பெற்றமைக்கு அமைய எட்டு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

விசாரணைகளில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 67 வயதான அவருக்கு 25 ஆண்டுகளாக பிணைக்கு விண்ணப்பிக்க முடியாத சிறை தண்டனை விதித்துள்ளது.

 

About அகமுகிலன்

x

Check Also

50 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட கடிதத்திற்கு பதில் எழுதிய சிறுவன்!!

இந்திய பெருங்கடலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட பாட்டிலில் அடைக்கப்பட்ட கடிதம் ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ளது. ஐரே (Eyre) தீபகற்பத்தில் உள்ள ...

%d bloggers like this: