Home / விளையாட்டுச் செய்திகள் / கத்தார் நாட்டு வீரர்கள் மீது காலணி வீசிய ஐக்கிய அரபு அமீரக ரசிகர்கள்

கத்தார் நாட்டு வீரர்கள் மீது காலணி வீசிய ஐக்கிய அரபு அமீரக ரசிகர்கள்

ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் நாட்டு வீரர்கள் மீது ஐக்கிய அரபு அமீரக ரசிகர்கள் காலணிகளை வீசி எறிந்தனர்.

ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் அபுதாபி நகரில் நடைபெற்றது. முகமுது பின் சையீத் அரங்கத்தில் நடந்த இந்தப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து கத்தார் நாட்டு வீரர்கள் களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே கத்தார் வீரர்கள் ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். இறுதியில் 4க்கு பூஜ்ஜியம் என்ற கோல்கணக்கில் கத்தார் அணி வெற்றி பெற்றது.

இதனை ஏற்க மறுத்த அமீரக ரசிகர்கள் காலி தண்ணீர் பாட்டில்கள், காலணிகளை கத்தார் வீரர்கள் மீது வீசினர். அதையடுத்து விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் கத்தார் அணியிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

நியுசிலாந்துக்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி

இன்று தொடங்கிய நியுசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ...

%d bloggers like this: