Home / ஆரோக்கியம் / கண் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் பொன்னாங்கண்ணி

கண் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் பொன்னாங்கண்ணி

இந்த கீரை அனைத்து சூழல்களிலும் வளரும் தன்மைகொண்டதால், எந்தக் காலத்திலும் மிக எளிதாகக் கிடைக்கும். இதில் நிறைய வகைகள் இருந்தாலும் நாட்டுப் பொன்னாங்கண்ணியே சமையலுக்குப் பயன்படுகிறது. இந்தக் கீரை குளிர்ச்சித்தன்மை கொண்டது.

சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து, பீட்டாகரோட்டீன் உள்ளன. கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாது உப்புக்கள் உள்ளன. பலன்கள்: சிறு குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்சனை இருந்தால், இதைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிடுவதுடன், கண்களுக்குப் பயிற்சியும் செய்துவந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும்.

கண்களில் நீர்வழிதல், கட்டி, தொற்று, மங்கலான பார்வை போன்ற கண் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் தீரும். மாலைக்கண் நோய்கூட குணமாகும். மூளை, நரம்புகள் சீராக இயங்கும். எலும்புகளும் வலிமை பெறும். சருமம் பொலிவுறும். கூந்தல் நன்றாக வளர உதவும்.

டிப்ஸ்: பொன்னாங்கண்ணி இலைகளின் சாறோடு, பசு வெண்ணெய் கலந்து, பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்தால், கண்கள் குளிர்ச்சி அடையும்.  பொன்னாங்கண்ணி யாருக்கும் எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. அனைவரும் சாப்பிடலாம்.

அனைவருக்கும் பகிருங்கள்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

தலைமுடி உதிர்வதைத் தடுக்க வெங்காயத்தைப் பயன்படுத்துவது எப்படி?

இன்றைய பரபரப்பான காலத்தில் அனைத்து வயதினரும் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. இந்த தலைமுடி உதிர்வதை நினைத்து ...

%d bloggers like this: