Home / உலகச் செய்திகள் / கட்டாய தனிமைப்படுத்தல் காலத்தை ஒரு வாரமாக குறைப்பதற்கு யோசனை

கட்டாய தனிமைப்படுத்தல் காலத்தை ஒரு வாரமாக குறைப்பதற்கு யோசனை

கட்டாய தனிமைப்படுத்தல் காலத்தை ஒரு வாரமாக குறைப்பதற்கு யோசனை

வைரஸ் தொற்றியவர்கள் மற்றும் தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கான கட்டாய சுய தனிமைப்படுத்தல் காலம் விரைவில் குறைக்கப்படவுள்ளது.

தற்சமயம் நடைமுறையில் உள்ள இரண்டு வார கால கட்டாய தனிமைப்படுத்தல் நாட்களைக் குறைப்பதற்கு அறிவியல் நிபுணர்கள் குழு சாதகமான சமிக்ஞையை வெளியிட்டுள்ளது. தனிமைப்படுத்தல் காலம் பெரும்பாலும் ஒரு வாரமாக குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் இந்த விடயம் விவாதிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் Olivier Véran ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கிறார்.

தொற்றாளர்களும் அவர்களோடு தொடர்பு வைத்திருந்தவர்களும் தாங்களாகவே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள தற்சமயம் வழங்கப்பட்டிருக்கும் இரண்டுவார தனிமைப்படுத்தல் காலத்தை
(14நாட்கள்) பலரும் அலட்சியம் செய்கின்றனர் என்று மருத்துவ வட்டாரங்களில் கவலை தெரிவிக்கப்படுகிறது.

தனிமைப்படுதலைத் தவிர்ப்பது ஆபத்தானது எனத் தெரிந்திருந்தும் தொழில் இழப்புக் கருதியும் வேறு பல காரணங்களுக்காகவும் பலரும் அதனைக் கடைப்பிடிக்கத் தவறுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்நிலையி்ல் தனிமைப்படுத்தல் காலத்தைக் குறைப்பதற்கு ஜரோப்பிய நாடுகள் பலவும் ஆலோசித்து வருகின்றன. ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து பெல்ஜியமும் தனிமைப்படுத்தல் காலத்தைக் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

About Radio tamizha

x

Check Also

பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் மேலதிக தகவல்

பிரான்ஸில் நேற்று இலங்கை குடும்பம் ஒன்று அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் ...