Home / உள்நாட்டு செய்திகள் / கடற்கரையை சுத்தப்படுத்தும்  செயற்பாடுகள் மீண்டும் முன்னெடுப்பு!!

கடற்கரையை சுத்தப்படுத்தும்  செயற்பாடுகள் மீண்டும் முன்னெடுப்பு!!

எண்ணெய் படிமங்கள் காரணமாக அசுத்தமான தெஹிவளை – கல்கிஸ்ஸை மற்றும் வெள்ளவத்தை கடற்கரையை சுத்தப்படுத்தும்  செயற்பாடுகள் இன்று மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளன.

நேற்று பெய்த கடும் மழைக்காரணமாக இந்த செயற்பாடுகள் கைவிடப்பட்டன.
கடலில் இருந்து வெளியேறிய எண்ணெய் படிமங்கள் காரணமாக கடற்கரை அசுத்தமாகியிருந்தது.

இந்தநிலையில் சுத்தப்படுத்தும் செயற்பாடுகளில் கடற்பாதுகாப்பு படை, கடற்படை மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியன ஈடுப்படவுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு குறித்த கடற்கரை பகுதிகளுக்கு பிரவேசிக்க வேண்டாம் என கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை பொதுமக்களை கோரியுள்ளது.

அந்த அதிகார சபையின் பொதுமுகாமையாளர் டேர்னி பிரதீப் குமார இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சற்று முன் இடம்பெற்ற விபத்து: ஐவர் பலி பலர் காயம் புகைப்படங்கள் உள்ளே

சற்று முன் (இரவு 8.20) வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் பலியாகியதுடன் பலர் ...

%d bloggers like this: