Home / உலகச் செய்திகள் / கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட கொரியாவில் வறட்சி!!

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட கொரியாவில் வறட்சி!!

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட கொரியா கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவிலான பொருளாதார தடைகள் ஒருபுறமிருக்க, மழை போதிய அளவு பெய்யாததால் வடகொரியா கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் இதுவரை அங்கு வெறும் சராசரியாக 54.4 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது.  இதற்கு முன்னர் 1982ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 51.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்ததே அந்த நாட்டில் மிக குறைந்த மழை பொழிவாகும்.

கடும் வறட்சியால் வடகொரியா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...

%d bloggers like this: