Home / உள்நாட்டு செய்திகள் / கடந்த இரண்டு தினங்களாக இறந்த நிலையில் கரையொதுங்கும் இலட்சக்கணக்கான மீன்கள்!!

கடந்த இரண்டு தினங்களாக இறந்த நிலையில் கரையொதுங்கும் இலட்சக்கணக்கான மீன்கள்!!

மன்னார் விடத்தல்தீவு நாயாத்து வெளி நாயாறு பகுதி கடலில் கலக்கும் ஆற்றில் கடந்த இரண்டு தினங்களாக இலட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் தொடக்கம் ஆற்றின் சற்றுத் தொலைவில் இறால் வளர்ப்புப் பண்ணை ஒன்று நிறுவப்பட்டு மிக வேகமாக வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையில், குறித்த பண்ணைக்கு நாயாற்றிலிருந்து நீரை எடுப்பதற்கு வாய்கள் வெட்டப்பட்டு குழாய் மூலம் நீரை இறைத்துள்ளமை ஆற்றில் மீன்கள் இறப்பதற்கு காரணமாக இருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மீனவர்கள் கரையோர பாதுகாப்புத் திணைக்களம் , கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம், நீர்பாசனத் திணைக்களம், மாந்தை மேற்கு பிரதேசச் செயலகம் உட்பட உரிய திணைக்களங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இறந்த நிலையில் காணப்பட்ட பல ஆயிரக்கணக்கான மீன்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு ஆற்றுக்குள்ளும் பல இலட்சம் மீன் குஞ்சுகள் மிதந்து காணப்படுகின்றன.

இதன் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என விடத்தல் தீவு மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

About இனியவன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: