Home / உள்நாட்டு செய்திகள் / ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை!

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை!

பின்தங்கிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவைகளுக்கான வெற்றிடங்கள் குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாண, ஓய்வு பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மாத்தறை – நாவுல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பின்தங்கிய பகுதிகளில் பாடசாலைகளை எடுத்துக் கொண்டால் அவற்றுள் உள்ள பாடசாலைகளிலேயே ஆசிரியர் வெற்றிடங்கள் அதிகம் உள்ளன.

அதனால் குறிப்பிட்ட ஒரு வயதெல்லையை தெரிவு செய்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: