Home / உள்நாட்டு செய்திகள் / ஒரே நாளில் இலங்கையில் இத்தனை நோயாளர்களா ??

ஒரே நாளில் இலங்கையில் இத்தனை நோயாளர்களா ??

நாட்டின் சில பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 194 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சீதுவ பிரதேசத்திலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, சீதுவ பிரதேசத்தில் 42 பேரும், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் 34 பேரும், மினுவாங்கொடை பிரதேசத்தில் 38 பேரும் கம்பஹா பிரதேசத்தில் 36 பேரும் இவ்வாறு கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொழும்பு மற்றும் மீரிகம ஆகிய பகுதிகளில் தலா 7 பேர் வீதம் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், ஹட்டன், குருநாகலை, நீர்கொழும்பு, ரத்மலானை, நுகேகொடை, கடவத்தை, ஜா – எல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களும் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை தனியார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இவ்வாறு நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 194 பேருடன், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 38 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, ஆயிரத்து 697 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தேசிய வைத்தியசாலையில், 156 பேரும், கம்புறுகமுவ வைத்தியசாலையில் 212 பேரும், நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் 160 பேரும், காத்தான்குடி வைத்தியசாலையில் 114 பேரும், தெல்தெனிய வைத்தியசாலையில் 121 பேரும், ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் 158 பேரும், வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் 120 பேரும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 14 வெளிநாட்டவர்கள் வைத்தியசாலைகளில் தங்கவைக்கபட்டு சிகிச்சையளிக்கபட்டு வருகின்றது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்றுவந்த 3 ஆயிரத்து 328 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 432 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்க்பட்டு வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக நேற்றைய தினத்தில் மாத்திரம் 6 ஆணிரத்து 566 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கபட்டுள்ளன.

இதன்படி, நாட்டில் இதுவரை 3 இலட்சத்து 48 ஆயிரத்து 909 PCR பரிசோதனைகள் முன்னெடுக்க்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை தனியார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் முன்னெடுக்க்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, மினுவாங்கொடை தனியார் ஆடைத்தொழிற்சாலை சார்ந்து ஏற்ப்பட்ட கொரோனா தொற்றில், 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

About VITHUSHA

x

Check Also

மேலும் 17 பேர் நாட்டை வந்தடைந்தனர்

மேலும் 17 பேர் இலங்கை வந்தடைந்தனர்…! அபுதாபியிலிருந்து 5 பேரும், கட்டாரிலிருந்து 12 பேரும் என, 17 பேர் இன்று ...