Home / உலகச் செய்திகள் / ஒரு லட்சம் பேரால் திணறிய லண்டன்!

ஒரு லட்சம் பேரால் திணறிய லண்டன்!

அமெரிக்க அரசதலைவர் டொனால்ட் ரம்ப்பின் பிரித்தானியப் பயணம் மற்றும் அவரது கடும்போக்கு கொள்கைகளுக்கு எதிர்ப்புத்;தெரிவித்து தீவிரமான போராட்டங்களும் பேரணிகளும் இன்று லண்டன் நகரில் நடத்தப்பட்டுவருகின்றன.

இதனால் இன்று காலை முதலே மக்கள்வெள்ளத்தில் மூழ்கி மத்திய லண்டன் திணறிவருகிறது.

இன்றைய பேரணிகள் மற்றும் போராட்டங்களில் சுமார் ஒரு லட்சம் பேர் இந்த் திரண்டிருந்ததாக அதன் ஏற்பாட்டு அமைப்புக்கள் கூறினர்.

இன்றைய போராட்டங்களால் பீ.பீ.சீ ஊடக பணியக முன்றல் உட்பட்ட பல வீதிகள் மக்கள்மயமாக இருந்தன.

இன்று காலை இடம்பெற்ற இந்தப்போராட்டங்களில் டொனால்ட் ரம்ப்பின் உருவ அமைப்பைகொண்ட பலூன் ஒன்றும் வெஸ்ற் மினிஸ்டர் நாடாளுமன்ற சதுக்கத்தில் பறக்க விடப்பட்டது. போராட்ட பேரணிகளில் அரசியல் பிரபலங்களும் பங்கேற்றனர்.

About இனியவன்

x

Check Also

ஐ.நா நோக்கி பொங்கு தமிழ் (படங்கள் உள்ளே)

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி பொங்கு தமிழ் 2018   Related

%d bloggers like this: