Home / உலகச் செய்திகள் / ஒருவார அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு பயணம்

ஒருவார அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு பயணம்

பிரதமர் மோடி ஒருவார அரசு முறைப் பயணமாக நேற்று இரவு அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார். ஹுஸ்டனில் நாளை 50ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்புடன் மோடி பங்கேற்று உரைநிகழ்த்துகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு விமானம் மூலம் புறப்பட்டார். இன்று முற்பகல் 11 மணியளவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹுஸ்டன் நகரை சென்றடையும் அவர், நாளை காலை, அமெரிக்க எரிசக்தி துறையைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

வட்டமேஜை மாநாடு போல நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது இந்தியாவில் எரிசக்தி துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து எடுத்துக் கூறுவதோடு, தொழில் தொடங்க வருமாறும் அவர் அழைப்பு விடுக்க உள்ளார்.

இதன் பின்னர் அவர் ஹூஸ்டன் நகரின் என்.ஆர்.ஜி. அரங்கத்திற்கு செல்லும் பிரதமர் அங்கு நடைபெறும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து பங்கேற்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் 50,000 பேர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியின் தலைவர்கள் பலரும் பங்கேற்கிறார்கள். இதன் பின்னர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

23-ஆம் தேதி அன்று பிரதமர் மோடி, நியூயார்க் நகருக்குச் செல்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டனியோ குட்ரெஸ் ஏற்பாடு செய்துள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கிலும் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதே போன்று பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை குறித்து பன்னாட்டு தலைவர்களுடனும் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தின கொண்டாட்டத்தை ஒட்டி வருகிற 24-ஆம் தேதி அன்று நியூயார்க் நகரில் இந்திய அரசு சார்பில் நடைபெறும் தலைமையின் முக்கியத்துவம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் நியூசிலாந்து, தென்கொரியா, சிங்கப்பூர் நாட்டு தலைவர்களும் மோடியுடன் பங்கேற்கிறார்கள்.

அதே நாளில் பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் தூய்மை இந்தியா திட்டத்திற்காக சிறப்பு விருது மோடிக்கு வழங்கப்படுகிறது.

25-ஆம் தேதி அன்று, புளூம்பெர்க் சர்வதேச வர்த்தக அமைப்பின் கருத்தரங்கில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கு சிறப்பரை ஆற்றுகிறார். இதன் பின்னர் இந்திய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர் மாநாட்டிலும் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

27-ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அந்த கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் நாடு திரும்புகிறார்.

இந்த பயணத்தின் போது,20 நாட்டுத் தலைவர்களை சந்திக்கும் மோடி, நாளையும், 24-ஆம் தேதியும் அமெரிக்க அதிபர் டிரம்புடன், இருமுறை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஒரே வாரத்தில் இரு நாட்டு தலைவர்களும் இருமுறை சந்திப்பது சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திய மகள்

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பெண் ஒருவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் யுவெட்டே எனும் ...

%d bloggers like this: