Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு!

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு!

1.5 பில்லியன் டொலர் மொத்தக் கடன் தொகையின் ஐந்தாம் தவணைக் கொடுப்பனவை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துடன் நடத்தவுள்ளது.

இந்த சர்வதேச நாணய நிதியத்தின் குழு ஒன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு ஜுன் மாதம் 3ம் திகதி இந்த கடன்தொகையை கட்டம் கட்டமாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கியது.

அதன்படி இதுவரையில் நான்கு கட்டங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தாவது கொடுப்பனவாக 252 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்தப்பட வேண்டும்.

ஆனால் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ம் திகதி இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் குறித்த இந்த கடன் வழங்கல் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

கடந்த மாதம் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் குழு ஒன்று வொசிங்டன் சென்று, சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இதன் பிரகாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஐந்தாம் கட்ட கடன் வழங்கல் குறித்து தீர்மானிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

 

About அகமுகிலன்

x

Check Also

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது!!

திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்  போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை கடற்படையினர் கைது ...

%d bloggers like this: