Home / விளையாட்டுச் செய்திகள் / ஐதராபாத் அணிக்கு 130 ஓட்டங்களை  இலக்காக நிர்ணயித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி!!

ஐதராபாத் அணிக்கு 130 ஓட்டங்களை  இலக்காக நிர்ணயித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி!!

டெல்லியில் இடம்பெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் ஐதராபாத் அணிக்கு  வெற்றி பெற 130 ஓட்டங்களை  இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

ஐ.பி.எல் தொடரின் 16-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் தொடங்கியது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

முதலில் நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி தரலவர்  புவனேஸ்வர் குமார் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் துடுப்பெடுதாட களமிறங்கினர்.

இந்த நிலையில் பிரித்வி ஷா 11 ஓட்டத்துடனும் , தவான் 12 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். அதையடுத்து களமிறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய நிலையில்  அவர் 43 ஓட்டத்துடன்  ஆட்டமிழந்தார்.

மறுபுறம் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் எடுத்தனர். ரிஷப் பந்த், ராகுல் திவேதி, காலின் ஐங்கிராம் ஆகியோர் தலா 5 ஓட்டங்களுடன் வெளியேறினர். இதனால் அந்த அணி 75 ஓட்டங்கைளை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களை  எடுத்துள்ளது.

ஐதராபாத் அணி சார்பில் மொகமது நபி, புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல் ஆகியோர் தலா  2 விக்கெட்டும்,  சந்தீப் சர்மா, ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

இலங்கை அணியின் டெஸ்ட் போட்டி தலைவர் திமுத் கருணாரத்ன கைது!!

இலங்கை அணியின் டெஸ்ட் போட்டி தலைவர் திமுத் கருணாரத்ன மது போதையில் வாகனத்தினை செலுத்தி பொரளை கின்சி வீதியில் விபத்தினை ...

%d bloggers like this: