Home / உள்நாட்டு செய்திகள் / ஐக்கியதேசியக் கட்சி புதிய தலைவர் யார்!

ஐக்கியதேசியக் கட்சி புதிய தலைவர் யார்!

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவரை நியமிப்பது நாளைய தினம் சிறிகொத்தவில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தின் போது இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முதல் பல சந்தர்ப்பங்களில் புதிய தலைமைத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்ட நிலையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இருப்பினும் தலைமைத்துவத்திற்காக UNPயின் முன்னணி பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் சுதந்திரமாக முன்வந்தவர்களும் ஒரு சிலரே.

இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், வஜிர அபேவர்த்தன, தயா கமகே. நவீன் திஸாநாயக்க, ருவன் விஜேவர்த்தன, அர்ஜுன ரணதுங்க ஆகிய சிலரே UNPயின் புதிய தலைமைத்துவத்தை ஏற்க தயாராக உள்ளனர்.

இதேவேளை மீண்டும் UNPயை மீண்டும் கட்டியெழுப்ப சஜித் பிரேமதாசவிடம் தலைமையை ஒப்படைக்குமாறு சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவும் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப தயாராக இருப்பதாகவும்  UNPயின்  தலைமையை ஏற்க விருப்பம் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், அனைத்து முன்மொழிவுகளும் சமர்ப்பிப்புகளும் இருந்தபோதிலும், ருவன் விஜேவர்தனவை UNP தலைவராக நியமிக்க தற்போதைய தலைமை தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய தலைவர் நியமிக்கப்பட்ட பின்னர், தேசிய பட்டியலில் உள்ள ஒரே இடத்திற்கு வேட்பு மனுக்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

About Radio tamizha

x

Check Also

ஊரடங்கு சட்டத்தினை மீறிய மேலும் 125 பேர் கைது!

பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ...