Home / இந்திய செய்திகள் / ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி இந்தியாவில் மனிதச் சங்கிலிப் போராட்டம்!!

ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி இந்தியாவில் மனிதச் சங்கிலிப் போராட்டம்!!

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்கோரி  மனித சங்கிலி போராட்டம்  நடைபெற்றது.

முருகன் , சாந்தன்,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 6 மாத காலமாகியும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், ஆளுநர் உடனடியாக அந்த கோப்பில் கையொப்பம் இட்டு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் மனித சங்கிலி போராட்டம் சென்னையில் நடைபெற்றது.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து அண்ணா சாலை வரை நடந்த அந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், திருமாவளவன், சத்யராஜ் உள்பட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மதுரை, நெல்லை, திருச்சி, புதுச்சேரி, கோவையிலும் மனித சங்கிலி போராட்டங்கள் நடந்தன.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

வைகாசி விசாகத் திருவிழாவில் குவிந்த ஏராளமான பக்தர்கள்!!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் ...

%d bloggers like this: