இலங்கை ஜனாநாயக சோசலிஷ குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று மாலை அறிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் செல்லுபடியான வாக்குகளில் 69 இலட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளை இவர் பெற்றார். இது மொத்த வாக்குகளில் 52.25 சதவீதமாகும். இவரை எதிர்த்து போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச 55 இலட்சத்து 64 ஆயிரத்து 239 (இது 41.99 சதவீத) வாக்குகளைப் பெற்றார்.
இதற்கு அமைவாக கோட்டாபய ராஜபக்ஷ தன்னை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசவிலும் பார்க்க 13 இலட்சத்து 60 ஆயிரத்து 16 வாக்குகளை மேலதிகமாக பெற்று வெற்றி பெற்றார். இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இதுவரையில் வேட்பாளர் ஒருவருக்கு கிடைத்த ஆகக்கூடிய வாக்குகள் இதுவாகும்.