Home / Uncategorized / ஏமி ஜாக்சன் – ஜார்ஜ் பனயோட்டு உடனான காதலை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தினார்.

ஏமி ஜாக்சன் – ஜார்ஜ் பனயோட்டு உடனான காதலை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தினார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஏமி ஜாக்சன் – ஜார்ஜ் பனயோட்டு உடனான காதலை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

2009-ல் நடைபெற்ற இளையோருக்கான உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்ற ஏமி ஜாக்சன் விஜய் இயக்கிய மதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக 2.0 பிரம்மாண்ட படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர் கேர்ள் இணைய தொடரிலும் ஏமி நடித்துள்ளார்.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் ஏமி ஜாக்சன், பாலிவுட்டில் சல்மான் கானுடனும், ஹாலிவுட்டில் சில நடிகர்களுடனும் இணைத்து பேசப்பட்டார். சமீபத்தில் ஏமி ஜாக்சன், ஜார்ஜ் என்ற தொழிலதிபருடன் உதட்டுடன் முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகிய நிலையில், தனது ஜார்ஜ் உடனான காதலை ஏமி ஜாக்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.

புத்தாண்டு தினமான நேற்று, ஜார்ஜ் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட ஏமி ஜாக்சன், வாழ்க்கையில் புதிய துவக்கத்தில் கால் பதிக்கிறோம். நான் உங்களை காதலிக்கிறேன். உலகத்திலேயே அதீத மகிழ்ச்சியுடன் நான் இருப்பதற்கு காரணமாக இருப்பதற்காக நன்றி. என்று குறிப்பிட்டுள்ளார்.

About அகமுகிலன்

x

Check Also

‛நேர்கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ்!!

விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியாகும் படம் ‛நேர்கொண்ட பார்வை’. பிங்க் ஹிந்தி ரீ-மேக்கான இதை, வினோத் ...

%d bloggers like this: