Home / உள்நாட்டு செய்திகள் / ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 293 பேர் கைது!!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 293 பேர் கைது!!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத சந்தேகநபர்கள், அவர்களுக்கு ஆதரவு வழங்கியவர்கள், தடை செய்யப்பட்ட அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 293 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (05) காலை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் விசாரணைகள் நிறைவடைந்த 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

ஏனைய சந்தேகநபர்கள் தடுத்துவைத்து விசாரணை செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர்களின் சொத்துக்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளுக்கு அமைய 41 சந்தேகநபர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிகணக்குகள் முடக்கப்படடுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 66.58 சதவீத வாக்களிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 66.58 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இந்த எண்ணிக்கை தபால்மூல வாக்களிப்பும் ...

%d bloggers like this: