Home / உள்நாட்டு செய்திகள் / எல்லைத் தாண்டி மீன்பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 மீனவர் கைது

எல்லைத் தாண்டி மீன்பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 மீனவர் கைது

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதோடு, இரண்டு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தில் இருந்து, நேற்று காலை, இரண்டு விசைப்படகுகளில், மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய எல்லையில், மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நெடுந்தீவுக்கு வட கிழக்கே, லைட் ஹவுஸ் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், இரண்டு விசைப் படகுகளையும் சுற்றி வளைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அதிலிருந்த 11 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி வழக்குப்பதிவு செய்த இலங்கை கடற்படையினர், காரை நகர் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தினர்.

 

 

About அகமுகிலன்

x

Check Also

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 13ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு..!!

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மற்றுமொரு கலந்துரையாடலை இந்த வாரம் நடத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக ...

%d bloggers like this: