Home / உலகச் செய்திகள் / எரிவாயு சிலின்டர் வெடித்து 73 பேர் உயிரிழப்பு…!!

எரிவாயு சிலின்டர் வெடித்து 73 பேர் உயிரிழப்பு…!!

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்று கொண்டிருந்த தாஜ் ஜெம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரயிலில் பயணித்தவர்கள் எரிவாயு சிலின்டரை எடுத்துவந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த தீ மூன்று ரயில் பெட்டியில் பரவியது. பலர் எரியும் ரயிலில் இருந்து தப்பிக்க வெளியே குதித்ததால் உயிரிழந்ததாக அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் இதுவரை 40 பேர் காயமடைந்துள்ளனர் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா கிருமி அழியாது-WHO

வைரசைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி தெருக்களில் மருந்து தெளிப்பதன் மூலம் கொரோனா கிருமிகளை அழிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு ...

%d bloggers like this: