Home / உள்நாட்டு செய்திகள் / எரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்க , தீர்மானம்!!

எரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்க , தீர்மானம்!!

காலி மாநகர சபையின் உறுப்பினர்களுக்கு, செய்தித்தாள்களை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவை வழங்கவும், எரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்கவும், தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மாநகரசபை உறுப்பினர்களுக்கு நாளாந்த செய்தித்தாள்களை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவு வழங்கப்பட்டதில்லை.

இந்த நிலையில் தங்களுக்கு அந்த வரப்பிரசாதத்தைப் பெற்றுத் தருமாறு கோரி, 30 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு கடிதம் ஒன்றினை மாநகரசபை முதல்வரிடம் கையளித்துள்ளனர்.

காலி மாநகரசபை உறுப்பினர்களுக்கு நாளாந்த செய்தித்தாள் கொள்வனவிற்காக 2 ரூபாய் வழங்கப்படுவதுடன், இதுவரையில் 3000 ரூபாவாக வழங்கப்பட்டு வந்த எரிபொருள் கொடுப்பனவும் 4500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: