Home / இந்திய செய்திகள் / என்ன வேலை செய்தாலும் லஞ்சம் வாங்க கூடாது என்று மோடியிடம் சத்தியம் வாங்கிய தாய்!

என்ன வேலை செய்தாலும் லஞ்சம் வாங்க கூடாது என்று மோடியிடம் சத்தியம் வாங்கிய தாய்!

என்ன வேலை செய்தாலும் லஞ்சம் மட்டும் வாங்க கூடாது என தனது தாய் சத்தியம் வாங்கியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடியின் வாழ்க்கை வரலாறு ஹூமன்ஸ் ஆப் பாம்பே என்ற முகநூல் பக்கத்தில் ஐந்து வார தொடராக வெளியாகி வருகிறது. அதில் தற்போதைய பதிவில் தனது தாய் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, பிரதமர் பதவியை ஏற்றதை விட, குஜராத் முதலமைச்சரான போது தான், தாயார் அதிகம் மகிழ்ந்ததாக மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் தான் முதலமைச்சரான போது, லஞ்சம் மட்டும் வாங்க கூடாது என்றும், அந்த பாவத்தை ஒரு போதும் செய்யக் கூடாது என்றும் தாயார் சத்தியம் வாங்கியதாக மோடி தெரிவித்துள்ளார்.

தாயாரை பொறுத்தவரை முதலமைச்சர், பிரதமர் பதவிகள் எல்லாம் எதுவுமே கிடையாது என்றும், மகன் சிறந்த மனிதனாக, நேர்மையானவனாக இருக்க வேண்டும் என்பதே தாயின் விருப்பமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

About அகமுகிலன்

x

Check Also

மர்ம நோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழப்பு!!

பீகாரில் மர்ம நோயால் தாக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரின் முசாபர்பூர் ...

%d bloggers like this: