Home / சினிமா செய்திகள் / என்கவுன்டர் ஸ்பெசலிஸ்டாக ரஜினி!!

என்கவுன்டர் ஸ்பெசலிஸ்டாக ரஜினி!!

பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்த நிலையில், சென்னை திரும்பியுள்ளார் ரஜினி. இங்கு ஒரு வாரம் ஓய்வெடுக்கும் ரஜினி, மீண்டும் தர்பார் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

ரஜினி இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒன்று ஐபிஎஸ் வேடம் என கூறப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்படி, ரஜினி இந்த படத்தில் என்கவுன்டர் ஸ்பெசலிஸ்டாக நடிப்பதாகவும், அது சம்பந்தப்பட்ட ஒரு காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

மேலும் மும்பை படப்பிடிப்பு தளத்தில் ரஜினி, சக நடிகர்கள் மற்றும் அங்கு வேலை பார்த்த தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். முஸ்லிம் மக்களுக்கு இது ரம்ஜான் காலம் என்பதால் அங்கு வேலைபார்த்த முஸ்லிம் கலைஞர்களுக்கும் இப்தார் விருந்தும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நடிகர் சூர்யாவுக்கு கமல் ஆதரவு!!

சிவகுமார் கல்வி அறக்கட்டளை நடத்திய விழாவில் நடிகர் சூர்யா, மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கையை ...

%d bloggers like this: