Home / உள்நாட்டு செய்திகள் / எந்த தடைகள் வந்தாலும் மிகவிரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் மைத்­தி­ரி­பா­ல ­சி­றி­சேன!

எந்த தடைகள் வந்தாலும் மிகவிரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் மைத்­தி­ரி­பா­ல ­சி­றி­சேன!

நாட்டில் மிக­வி­ரைவில் மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்த நாம்       ஆலோ­சித்­து ­வ­ரு­கிறோம். தடைகள் வந்­தாலும் இன்னும் சில­  மா­தங்­களில் தேர்தல் நடத்­தப்­படும். ஐக்­கி­ய­ தே­சி­யக்­கட்­சி­யா­னது தேர்தல் தோல்­விக்கு                          அச்­சப்­ப­டு­கின்­றது. ஏதா­வ­து­ கா­ர­ணங்­க­ளை ­முன்­வைத்­து தேர்­தலை பின்­தள்­ளிப் ­போ­டு­வதை ஏற்­றுக்­கொள்­ள­              மு­டி­யாது என்று  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல ­சி­றி­சேன தெரிவித்துள்ளார்.

மலை­ய­கத்தின் பல்­வே­று ­ப­கு­தி­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மக்கள் பணி­யக இளைஞர் அமைப்­பி­ன­ருக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­ சி­றி­சே­ன­வுக்கும் இடை­யி­லான கலந்­து­ரை­யாடல் ஜனா­தி­ப­தியின்  உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் நேற்­று­ முன்­தினம் இரவு இடம்­பெற்­றது. தன்­போது ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­விக்குப்      பதி­ல­ளிக்­கை­யி­லேயே ஜனா­தி­பதி இவ்­வாறு குறிப்­பிட்டார்.

­மேலும் அவர் கருத்­து­வெ­ளி­யி­டு­கையில்,

மாகா­ண­சபைத் தேர்தல் உட­ன­டி­யா­க ­ந­டத்­தப்­ப­ட ­வேண்டும். தேர்தல்   நடத்­தப்­ப­டா­ததால் அர­சி­ய­ல­மைப்­பு ­                    மீ­றப்­பட்­டுள்­ளது. புதி­ய­தேர்தல்    முறை­மைக்­கு­  சி­று­அ­ர­சியல் கட்­சிகள் தம­து ­எ­திர்ப்­பி­னை ­வெ­ளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. புதி­ய­தேர்தல் முறை­மை­தொ­டர்­பா­ன ­சட்­ட­மூலம் தொடர்பில் ,குறிப்­பாக அது குறித்த ஆட்­சே­ப­னைகள் இரண்டு      வரு­டங்­க­ளாகப் பரி­சீ­லிக்­கப்­ப­டு­கின்­றன.

மேலும் இது  அர­சாங்­கத்தின் பிரச்­சி­னை­யாகும். எவ்­வா­றெ­னினும் எந்தத் தேர்­த­லா­யினும் அது ­பிற்­போ­டப்­ப­டு­வ­து ­என்­ப­து ­ஏற்­றுக்­கொள்­ள ­மு­டியா தொன்­றாகும். ஐக்­கி­ய ­தே­சி­ய­கட்­சி­யா­ன­து ­தேர்தல் தோல்­விக்குப்       பயப்­ப­டு­கி­றது. ஏதா­வது கார­ணங்­களை முன்­வைத்து தேர்­தலை பின்­தள்­ளிப்­போ­டப்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்­ள­ மு­டி­யாது.

மாகாண சபைகள் கலைக்­கப்­பட்­டுள்­ளதால் ஏரா­ள­மான நிர்­வாகச் சிக்­கல்கள் எழுந்­துள்­ளன. உதா­ர­ணத்­துக்குச் சொல்வதென்றால் நாட்டில் 342 தேசி­ய­ பா­ட­சா­லை­களும் 10 ஆயி­ரத்து 140 மாகாண பாட­சா­லை­களும் உள்­ளன. இங்கே, மாகா­ண ­பா­ட­சா­லை­க­ளுக்கு உரி­ய­தே­வை­களைப் பூர்த்­தி­செய்­ய­ அ­மைச்­சர்கள், அல்­லது மக்கள் பிர­தி­நி­திகள் இல்­லாத குறை­பா­டு ­உண்டு. இதே­போன்று ஏனைய துறை­க­ளிலும் பிரச்­சி­னைகள் உண்டு. மாகாண சபை­க­ளுடன் தொடர்­பு­டைய துறைகள் வீழ்ச்­சி­ய­டை­கின்­றன.

இவற்றைக் கட்­டி­யெ­ழுப்­ப ­ வேண்டுமானால் அந்­தந்த சபை­க­ளுக்கு மக்கள் பிர­தி­நி­திகள் தேர்­தலின் ஊடா­க ­                    நி­ய­மிக்­கப்­ப­ட ­வேண்டும். நாம் மாகாண சபை தேர்தல் குறித்து மஹிந்த அணி­யு­டனும் பேச்­சு­வார்த்­தை ­ந­டத்­தி                ­வ­ரு­கிறோம். மாகாணசபைத் தேர்தல் மிக விரைவில் நடத்தப்பட  வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் எந்தமாற்றமும் இல்லை. தடைகள் வந்தாலும் மிக விரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்றார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளிக்கையில், “தற்போதைய தேவை மாகாண சபைத் தேர்தல்தான். ஜனாதிபதித் தேர்தல் வரும்போது அது குறித்துப் பேசலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

About அகமுகிலன்

x

Check Also

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடன் அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த இடமாற்றம் ...

%d bloggers like this: