Home / உள்நாட்டு செய்திகள் / எந்த இடமாற்றங்களும் மேற்கொள்ள வேண்டாம்-தேர்தல்கள் ஆணைக்குழு

எந்த இடமாற்றங்களும் மேற்கொள்ள வேண்டாம்-தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையூறு ஏற்படும் வகையில், எந்த இடமாற்றங்களும் மேற்கொள்ள வேண்டாம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, பொது நிர்வாக அமைச்சிற்கு அறிவித்துள்ளது.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் கிராமசேவகர்கள் தற்போது சேவையாற்றும் இடத்திலேயே தொடர்ந்தும் பணிபுரிவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறு இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் இந்தத் தீர்மானம எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஓய்வுபெறவுள்ள மாவட்ட செயலாளர்களுக்கு சேவை நீடிப்பு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொது நிர்வாக அமைச்சிற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது .

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (26) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 135 பேர் ...

%d bloggers like this: