Home / உள்நாட்டு செய்திகள் / எதுவேண்டுமானாலும் செய்வேன் – ஆறுமுகன் தொண்டமான்

எதுவேண்டுமானாலும் செய்வேன் – ஆறுமுகன் தொண்டமான்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவினை வழங்குமாறு முதலாளிமார் சம்மேளனத்திற்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்காவிட்டால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு பதவியையும் பொருட்படுத்தாமல் தனது மக்களுக்காக எதுவேண்டுமானாலும் செய்வேன் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபா வழங்க வேண்டும் என நாடாளாவிய ரீதியில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆர்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாளிமார் சம்மேளனத்துடன் தொழிற்சங்கங்கள் பேச்சுக்களையும் முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவினை வழங்காவிட்டால் தாம் நாடாளுமன்ற அங்கத்துவத்தினையும் விட்டு விலகுவேன் என அமைச்சு பொறுப்பினை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.

ஆனால் இது வரை தொழிலாளர்களின் வேதன பிரச்சினைக்கு தீர்வு கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஆறுமுகன் தொண்டமானிற்கு அமைச்சு வழங்கப்பட்டது. தொழிலாளர்களுகு 1000 ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க புதிய பிரதமர் உறுதியளித்ததாகவும் அதனால் தாம் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து அமைச்சினை பெற்றுக்கொண்டதாகவும் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்காத பட்சத்தில் தாம் தொழிலாளர்களுக்காக எதனை செய்ய தயாராகவுள்ளேன் என ஆறுமுகன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.

ஆனால் அமைச்சு பதவியையும் இராஜினாமா செய்வேன் என ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்ததாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தொழிற்சங்கங்கள் நிபந்தனையற்ற ஆயிரம் ரூபாய் சம்பளத்தை கோரவில்லை என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் அறுமுகன் தொண்டமான், தாம் தொழிற்சங்கங்களிடம் நேரடியாக ஆயிரம் ரூபாய் சம்பளத்தினை கோரியுள்ளேன். இதனை மறுக்க எவராலும் முடியாது. அமைச்சர் மகிந்த சமரசிங்க என்னுடன் பேச்சுக்களில் பங்கெடுக்கவில்லை. அவ்வாறிருக்க தாம் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளத்தினை கோரவில்வில்லை என எவ்வாறு கூற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

About இனியவன்

x

Check Also

பாராளுமன்றை கூட்டியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்!!! 7 நிமிடங்களுக்குள் நடந்ததென்ன? (Video)

கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ...

%d bloggers like this: