Home / உள்நாட்டு செய்திகள் / எதிர்வரும் 21ம் திகதி வரை மழையுடனான வானிலை தொடரும்!!

எதிர்வரும் 21ம் திகதி வரை மழையுடனான வானிலை தொடரும்!!

தற்போது நிலவுகின்ற மழையுடனான வானிலை எதிர்வரும் 21ம் திகதி வரையில் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்வதுடன், இடி மின்னல் தாக்கமும் அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் இடிமின்னலில் இருந்து பாதுகாப்பை பெறுவதற்கான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்றும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழைப் பெய்யும்.

குறிப்பாக சப்ரகமுவ,மத்திய, தென், ஊவா, மேல், வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் கடுமையான மழைப் பெய்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை

நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...

%d bloggers like this: