Home / உள்நாட்டு செய்திகள் / எதிர்வரும் 16 மணித்தியாலங்களுக்கு வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிவித்தல்!

எதிர்வரும் 16 மணித்தியாலங்களுக்கு வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிவித்தல்!

எதிர்வரும் 16 மணித்தியாலங்களுக்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் என அந்த வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் மேல் , வடமேல் , தென் மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பாரிய மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு என வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: