Home / உள்நாட்டு செய்திகள் / எதிர்ப்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காததால் மாணவி தற்கொலை…!

எதிர்ப்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காததால் மாணவி தற்கொலை…!

தான் எதிர்ப்பார்த்த பெறுபேறுகள் கிடைக்கவில்லை என்ற மனவேதனையில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவியொருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இவர் இன்று காலை(29.03.2018) இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் கல்விகற்று பரீட்சை எழுதிய கைவேலி மருதமடு குழ வீதியை சேர்ந்த சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவியே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இவரின் தந்தை இறுதி யுத்தத்தில் உயிரிழந்துள்ள நிலையில் தாயை பிரிந்து அம்மம்மாவுடன் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

About இனியவன்

x

Check Also

யாழ் காரைநகர் கும்பநாயகி அம்மன் ஆலயக் கொடியேற்றம் இன்று ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு கும்பநாயகி அம்மன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் ...

%d bloggers like this: