Home / உள்நாட்டு செய்திகள் / எதிர்க் கட்சித் தலைவர் புதிய பிரதமருடன் சந்திப்பு

எதிர்க் கட்சித் தலைவர் புதிய பிரதமருடன் சந்திப்பு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை இன்று சந்தித்துள்ளார்.

கொழும்பு விஜயராம வீதியிலுள்ள மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (30) காலை இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பில் இரா. சம்பந்தன் மாத்திரமே இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்ததாகவும் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் பாராளுமன்றக் குழு இன்று கூடுகின்றது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று பகல் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக
எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

About இனியவன்

x

Check Also

யாழ் காரைநகர் கும்பநாயகி அம்மன் ஆலயக் கொடியேற்றம் இன்று ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு கும்பநாயகி அம்மன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் ...

%d bloggers like this: