Home / கட்டுரைகள் / எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை எதிர்நோக்கவுள்ள இலங்கை

எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை எதிர்நோக்கவுள்ள இலங்கை

இலங்கையில் கடந்த ஒரு வார காலப் பகுதியில் மர்மமான முறையில் 8 யானைகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்தும், யானைகள் தொடர்பான கருத்துக்கள் பேசுப் பொருளாக மாறியுள்ளன.

இந்த நிலையில், யானைகள் தொடர்பில் ட்ரூ சிலோன் செய்திப் பிரிவு சில விடயங்களை ஆராய்ந்தது.

குறிப்பாக இலங்கையில் ஆண்டொன்றிற்கு சுமார் 280 யானைகள் வரை இறப்பதாக கடந்த ஐந்து வருடங்களில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புக்களின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென சூழலியலாளர் சஜீவ ஷாமிக்கர தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டில் மாத்திரம் 278 யானைகள் இறந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மனிதர்களுக்கும், காட்டு யானைகளுக்கும் இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற பின்னணியிலேயே இந்த யானைகளின் இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் அழிவை எதிர்கொள்ளும் யானைகள் – வருடத்திற்கு இத்தனை யானைகள் மரணிக்கின்றனவா?

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து யானைகள் இறந்திருந்தமையை சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் கூட்டாக ஒரே தடவையில் 7 யானைகள் கொல்லப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஹபரண பகுதியில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சில அபிவிருத்தி பணிகளை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்குடன் சில சந்தர்ப்பங்களில் இந்த நாசக்கர செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் இதன்போது வெளியிட்டிருந்தார்.

இலங்கையில் 6000 முதல் 6500 வரையான காட்டு யானைகள் வரை இருக்கின்றமை இறுதியாக நடத்தப்பட்ட கணிப்பீட்டின் பிரகாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், தொடர்ச்சியாக யானைகள் இறக்கின்றமையினால் விரைவில் யானைகள் அழிவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

யானைகளின் முக்கியத்துவம்

நாடொன்றில் காணப்படுகின்ற ஈர மற்றும் உலர் வலய காடுகளின் விஸ்தரிப்பிற்கு, காட்டு யானைகள் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றன.

குறிப்பாக யானைகள் உட்கொள்ளும் உணவு வகையில் சுமார் 40 வீதமானவை மாத்திரமே சமிப்பாடு அடைவதாகவும், எஞ்சிய 60 வீதமான உணவு கழிவாக வெளியேற்றப்படுவதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

இந்த நிலையில், வெளியேற்றப்படும் கழிவுகளில் மரங்கள் வளரக்கூடிய விதைகள் காணப்படுகின்றமையினால், இந்த விதைகள் விரைவில் துளிர்விட்டு, அவை பாரிய காடுகளாக உருவெடுக்கின்றன.

2010ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணிப்பீட்டின் பிரகாரம், ஈழ வலய காடுகள் 2.8 வீதமும், உலர் வலய காடுகள் 17 வீதமும் காணப்படுகின்றன.

எனினும், தொடர்ச்சியாக காடழிப்புக்கள் இடம்பெற்று வருகின்றமையினால், 17 வீதமான காணப்பட்ட உலர் வலய காடுகள் தற்போது 15 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில். யானைகள் தொடர்ச்சியாக கொல்லப்படும் பட்சத்தில், இலங்கை பாரிய விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என அச்சம் வெளியிடப்படுகின்றது.

காடுகள் மற்றும் யானைகளை பாதுகாக்கின்றமையானது, ஒரு தேசிய பொறுப்பு என்ற நிலைப்பாட்டில் அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் சூழலியலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கை மத்திய வங்கியின் கீழ் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE      ...

%d bloggers like this: