Home / உள்நாட்டு செய்திகள் / ஊரடங்கு தொடர்பில் வெளியாகிய தகவல்

ஊரடங்கு தொடர்பில் வெளியாகிய தகவல்

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள ஒரு சில பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,“மினுவாங்கொட ஆடைதொழிற்சாலையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள் அனைவரும் தற்போது சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுள் ஆயிரத்து 36 பேர் தொழிற்சாலை பணியாளர் ஆவர். ஏனைய 231 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர். பெரும்பாலானவர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக குறித்த அனைவரும் அடையாளம் காணப்பட்டனர்.

குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இவர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதேவேளை கடந்த 6 நாட்களில் 24 ஆயிரத்து 878 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாளொன்றில் சுமார் 5 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் 3 நாட்களுக்கு ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் எதுவித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

எவ்வாறாயினும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை எம்மால் அவதானிக்ககூடியதாக உள்ளது.

எனவே ஒரு சில பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை தளர்த்துவது தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்தியுள்ளளோம்.

கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளுக்குட்படுத்தப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதன் அடிப்படையில் கம்பஹா, கணேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிப்பிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வேயாங்கொட, மினுவாங்கொட, வீரங்குல, வெலிவேறிய, பல்லேவேல மற்றும் யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கும் களனி வலயத்திற்குட்பட்ட ஜா எல கந்தான பொலிஸ் பிரிவுகளுக்கும் நீர் கொழும்பு வலயத்திற்குட்பட்ட திவுலப்பிட்டிய மற்றும் சீதுவ ஆகிய பகுதிகளுக்கும் இவ்வாறு ஊரடங்குச்சட்டம் அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது” என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

About VITHUSHA

x

Check Also

ஊரடங்கு சட்டத்தினை மீறிய மேலும் 125 பேர் கைது!

பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ...