Home / உலகச் செய்திகள் / உலக வங்கியின் தலைவர் பதவிக்கு டேவிட் மல்பாஸ் பெயரினை பரிந்துரை செய்த அதிபர் டிரம்ப்!

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு டேவிட் மல்பாஸ் பெயரினை பரிந்துரை செய்த அதிபர் டிரம்ப்!

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அமெரிக்க கருவூலத் துறையின் மூத்த அதிகாரி டேவிட் மல்பாஸ் David Malpass பெயரினை அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.

உலக வங்கியின் தலைவராக இருந்த ஜிம் யோங் கிம் கடந்த 1ஆம் தேதியுடன் பதவி விலகினார். இந்த பதவிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா பெயர் பரிந்துரைக்கப்படலாம் என தகவல் வெளியானது. அதை வெள்ளை மாளிகை மறுத்த நிலையில்,  உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க கரூவூலத்துறையின் மூத்த அதிகாரியான டேவிட் மல்பாஸ் பெயரை அதிபர் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

சர்வதேச நிதி விவகாரத்தில் உலக வங்கியின் பங்கை மேலும் சிறியதாகவும், குறிப்பானதாகவும் மாற்ற வேண்டும் என்ற கொள்கை கொண்டவர் மல்பாஸ். அது  போல, சீனா உலக வங்கியின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருப்பது குறித்தும், அந்நாட்டின் திட்டங்கள் குறித்தும் டேவிட் மல்பாஸ் கடுமையாக விமர்சித்து வருபவர். எனவே, உலக வங்கி தலைவர் பதவிக்கு டேவிட் மல்பாஸ் பெயரை டிரம்ப் பரிந்துரைத்துள்ளது சர்ச்சைக்குரியதாகவே கருதப்படுகின்றது.

 

About அகமுகிலன்

x

Check Also

மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப அவசர நிலைப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!

அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டிய நிதியைப் பெறுவதற்காக அவசர நிலைப் பிரகடனத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் ...

%d bloggers like this: