Home / கட்டுரைகள் / உலக உணவு தினம்…

உலக உணவு தினம்…

தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால் இன்றும் ஒருவேளை உணவுக்கு வகையின்றி வறுமையில் வாடும் ஏழைகள் அதிகம.; குடியிருக்க வீடுகளின்றி நடைபாதையில் வசிக்கும் அவலங்கள் இன்றும் உலகளாவிய நிலையில் தொடர்ந்து வருவதுதான் இன்றைய நூற்றாண்டின் காலக்கொடுமை! நாம் உயிர் வாழ அத்தியாவசியமான உணவைச் சிறப்பிக்கும் பொருட்டு ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் திகதியை உலக உணவு நாள் என்று உலக நாடுகள் கொண்டாடுகின்றன.
கடந்த 1945 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ம் திகதி ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவுக் கூர்ந்து இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது ஐக்கிய நாட்டுச் சபை. 1979 ம் ஆண்டில் நவம்பர் மாதம் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இத்தினம் சர்வதேச தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஹங்கேரியின் முன்னாள் வெளிநாடு அமைச்சர் பால் ரொமானி என்பவரின் பெரும்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 192 நாடுகள் ற்கும் அதிகமான நாடுகளில் உலக உணவு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தாலியில் உரோமைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் பொதுவாக உணவுஇ விவசாய அமைப்பென அறியப்படும் “ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை” அமைப்பானது மக்களின் பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும்இ விவசாயத்தையும்இ உணவுப் பொருட்கள் தயாரிப்பினையும்இ சந்தைப்படுத்தல்இ விநியோகம் போன்றவற்றுடன் கிராமங்களை விருத்தி செய்து பசி பட்டினியை போக்குவதற்காகவும் பாடுபடுகின்றது. இதன் இலச்சினையிலுள்ள “குஐயுவு PயுNஐளு” என்பதன் பொருளானது “ரொட்டியாவது மனிதனுக்கு இருக்க வேண்டும்” என்பதாகும்.

ஐக்கியநாடுகள் சபையின் உணவு விவசாய நிறுவனம் 1945ம் ஆண்டு கியூபெக் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1951ம் ஆண்டு தலைமை அலுவலகமானது ஐக்கிய அமெரிக்காவில் இருந்து உரோமுக்கு மாற்றப்பட்டது. ஆண்டு தோறும் உரோமில் உணவு விவசாய நிறுவன தலைமையகத்தில் பிரதான வைபவம் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உணவுகள் ஏஜென்சி அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால்இ இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு வேளை சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும்இ இதற்காக பாடசாலைக்கு அனுப்புதல்இ உடைகள் வாங்குதல்இ அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாக அந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது. சோமாலியாவில்இ வன்முறையும்இ உள்நாட்டுப் போரும் நாட்டையே உருக்குலைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறைஇ சண்டையில் ஊறிப்போய்க் கிடக்கும் அந்த நாட்டில்இ வறுமை தலைவிரித்தாடுகிறது. உலகம் முழுவதும் 30 நாடுகளின் பட்டினியை போக்க அவசரகால நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அவற்றில் இருபது நாடுகள் ஆபிரிக்காவை சேர்ந்தவையாகும். எதிர்வரும் 2015 ம் ஆண்டிற்குள் பட்டினி அவலத்தை பாதியாக குறைப்போம் என உலக தலைவர்கள் உறுதி ப+ண்டிருந்தாலும் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும். அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் இதற்கு உதவுவதற்கு முன்வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். உணவு கிடைக்காமலும் போதிய போசாக்கின்மையினாலும், ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்ருக்கிறது என்ற விடயம் விஞ்ஞான யுகத்தின் ஆச்சரியத்திற்குரிய விடயமாகும்;

. இந்நிலையில் உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில். ஒவ்வொரு வருடமும் உரோமிலுள்ள உணவு விவசாய தலைமையகத்தில் உலக உணவு தின பிரதான வைபவம் இடம்பெறுவது வழமையாகும். உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதான இலக்குகளாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் உதவிகளை அதிகரித்தல். நாட்டு மக்களின் போசாக்கினை அதிகரித்தல் உணவு விவசாயம், காடுகள், மீன்பிடி பற்றிய அறிவினை வளர்த்தல் அவை குறித்து அரசுகளுக்கு ஆலோசனைகள் வழங்குதல், உணவு மற்றும் விவசாய பிரச்சினைகளை நடுநிலையுடன் அலசி ஆராய்ந்து அவை சார்பான பக்கசார்பற்ற கொள்கைகளை உருவாக்குதல் போன்றனவாகும். விஞ்ஞானத்தின் வளர்ச்சி விண்வெளி நோக்கி நீண்டு கொண்டிருக்கும் இக்காலத்தில் உலகின் பல நாடுகளில் மக்கள் பசிப்பட்டினியால் வாடுகின்றமை மனிதனின் மறுபக்கம் சோகமயமானது என்பது எடுத்துரைக்கிறது….உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் தான் உண்ணும் உணவில் ப+ரணத்தும் அடையும் வரை மனித இனத்தின் சாதனைகளும் வெற்றிகளும் ப+ரணம் அடையப்போவதில்லை….முதலில் பட்டினியை போக்கி பசுமை நிறைந்த சமூதாயத்தை உருவாக்க மனித இனம் புறப்படட்டும்…………………………………

……பிரசன்னா ……..

About இனியவன்

x

Check Also

Huawei Technologies Lanka Co (Pvt) Ltd. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE      ...

%d bloggers like this: