Home / சினிமா செய்திகள் / உலக அளவில் ஏழாவது இடத்தை பிடித்து சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்

உலக அளவில் ஏழாவது இடத்தை பிடித்து சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்

தனுஷின் ரவுடி பேபி பாடல் உலக அளவில் ஏழாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சாய்பல்லவி நடிக்க மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூ – டியூப் தளத்தில் வெளியானது முதல் பல சாதனைகளை படைத்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் தனுஷ், தீ பாடிய இப்பாடல் இப்போது உலகளவில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்தாண்டு வெளியான இப்பாடல் யூ-டியூப் தளத்தில் இதுவரை 71.5 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. 2019ல் பில்போர்ட் யூ-டியூப் பட்டியலில் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் காட்சியில் இது ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை வெளியான இந்திய மொழிப் பாடல்களில் அதிக பார்வையாளர்களை கடந்து ‛ரவுடி பேபி’ பாடல் நம்பர் 1 இடத்தில் பயணித்து வருகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சிறந்த கதாநாயகி விருதுகளை பெற்ற நயன்தாரா RADIOTAMIZHA

தமிழ்நாட்டின் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய விருது வழங்கல் நிகழ்வில் பிகில்,விஸ்வாசம் போன்ற படங்களுக்காக சிறந்த கதாநாயகி விருதுகளை பெற்றார் ...

%d bloggers like this: