Home / உலகச் செய்திகள் / உலக அளவில், அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து காமி ரிடா செர்பா சாதனை!!

உலக அளவில், அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து காமி ரிடா செர்பா சாதனை!!

உலக அளவில், அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை தொட்டவர் எனும் பெருமையை கிழக்கு நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் பெற்றுள்ளார்.

காமி ரிடா செர்பா எனும் அவர், 1994ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். அதன் பின்னர் அடிக்கடி எவரெஸ்ட் பயணத்தில் ஈடுபட்டுவரும் அவர், தற்போது 24ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார். 21 முறை ஏறியதே இதுவரை உலக சாதனையாக இருந்துவந்த நிலையில் அதனை ஏற்கெனவே முறியடித்த அவர், தற்போது தனது சாதனையையே மீண்டும் மீண்டும் முறியடித்து வருகிறார்.

உலகின் உயரமான சிகரம் என அழைக்கப்படும் எவரெஸ்ட்டை அடைவது என்பது மிகச் சிலருக்கு மட்டுமே இதுவரை சாத்தியமாகியுள்ள நிலையில், 24 முறை இந்தச் சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி அதிகாரிகளிடம் சிக்கினர்.

பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் இருந்த பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி ...

%d bloggers like this: