Home / தொழில்நுட்ப செய்திகள் / உலகிலேயே முதன்முறையாக 5ஜி தொழில்நுட்பம் மூலம் தானாக இயங்கும் மின்சார டிரக்

உலகிலேயே முதன்முறையாக 5ஜி தொழில்நுட்பம் மூலம் தானாக இயங்கும் மின்சார டிரக்

உலகிலேயே முதன்முறையாக ஸ்வீடன் நாட்டில் ஓட்டுநரில்லா மின்சார டிரக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன.

அந்நாட்டைச் சேர்ந்த ஐன்ரைடு என்ற நிறுவனம் இந்த மின்சார டிரக்கை தயாரித்துள்ளது. இது 26 டன் எடை கொண்டது. கேமராக்கள், ரேடார், முப்பரிமாண சென்சார்கள், 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்கக் கூடிய தொழில்நுட்ப அமைப்பு ஆகியவை இந்த டிரக்கில் உண்டு. டிரக்கில் உள்ள தொழில்நுட்ப அமைப்புகள் அனைத்தும் 5ஜி மூலம் இயங்கக் கூடியவை. மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடியது.

ஆனால் தற்போது சோதனை முறையில் சாலைகளில் இயக்கப்படுவதால் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ஓட்டுநரில்லா இந்த மின்சார டிரக்கானது தற்போது ஜோங்கோபிங் சாலையில், பொருட்களுடன் சுற்றி வருகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதி!!

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குரோம் இணைய உலாவியே இன்று உலகளவில் அதிக பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த உலாவியில் ...

%d bloggers like this: