Home / விளையாட்டுச் செய்திகள் / உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் அடிக்கப்படுமா?- இங்கிலாந்து வாரியம் சூசகம்

உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் அடிக்கப்படுமா?- இங்கிலாந்து வாரியம் சூசகம்

இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பைப் போட்டியில் ஒரு அணி ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் அடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சூசகமாக தெரிவித்துள்ளது.

முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டு வரும் ஆடுகளத்தால், ஒரு இன்னிங்ஸில் ஒரு அணி சராசரியாக 350 ரன்களுக்கு மேலும், அதிகபட்சமாக 500 ரன்கள் வரையிலும் அடிக்க முடியும்.

இதற்காகவே வழக்கமாக ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஸ்கோர் கார்டு அட்டைகள் 400 ரன்களுக்கானது மட்டும் அச்சடிக்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த முறை 500 ரன் எண்கள் கொண்ட ஸ்கோர் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி டெலிகிராப் நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது : ” கடந்த வாரம் உலகக் கோப்பைப் போட்டி இயக்குனர் ஸ்டீவ் எல்வொர்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் ரசிகர்களுக்கு வழங்கப்படும் ஸ்கோர் கார்டு வழக்கமாக 400 ரனக்ளுக்கு மட்டுமே அச்சடிகப்பட்ட நிலையில், இந்த முறை 500 ரன்களுக்கான ஸ்கோர் கார்டுகளையும் அச்சடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் கடந்த ஆண்டு பிரிஸ்டலில் நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்தது.

இதேபோல, தற்போது நடந்துவரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சவுத்தாம்டனில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் சேர்த்தது. இந்த இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 361 ரன்கள் வரை சேர்த்தது.

 

பிரிஸ்டலில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 358 ரன்கள் சேர்க்க அதை 31 பந்துகள் மீதம் இருக்கும்நிலையில் இங்கிலாந்து சேஸிங் செய்தது. ஆதலால், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான முறையில் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு இருப்பதால், இந்த முறை ஒரு இன்னிங்ஸில் ஒரு அணி 500 ரன்கள் அடிக்க முடியும் என்பது சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரி டாம் ஹாரிஸன் கூறுகையில், ” இந்த முறை ரசிகர்களுக்கு வழங்கப்படும் ஸ்கோர் கார்டை 500 ரன்களுக்குரிய கார்டுகளை வழங்க முடிவு செய்துள்ளோம். 50 ஓவர்கள் போட்டியில் இந்த முறை ஒரு இன்னிங்ஸில் நிச்சயம் 500 ரன்கள் எட்டப்படும் என்று நம்புகிறோம். முதலில் பேட் செய்யும் அணியின் இலக்கை 2-வது பேட் செய்யும் அணி விரட்டிச் செல்லும் வகையில் போட்டித் தொடர்இருக்கும். இந்த முறை உலகக் கோப்பை ரசிகர்களுக்கு மிகச்சிறந்த விருந்தாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்

About இனியவன்

x

Check Also

மறக்கமுடியாத உலகக் கிண்ண சர்ச்சைகள்: ஒருபந்தில் 22 ஓட்டங்கள்

எந்த ஒரு போட்டித்தொடர் முடிவடையும் போதும் இதில் சில சலசலப்புகள், சர்ச்சைகள் இருப்பது இயல்புதான். அதில் ஐசிசி நடத்திய உலகக்கிண்ணப் ...

%d bloggers like this: