Home / விளையாட்டுச் செய்திகள் / உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளரை கூடுதலாக சேர்த்திருக்க வேண்டும்: கவுதம் காம்பீர் கருத்து

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளரை கூடுதலாக சேர்த்திருக்க வேண்டும்: கவுதம் காம்பீர் கருத்து

மும்பை: ‘‘உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனர். இது போதாது, இன்னும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் இருந்திருக்க வேண்டும்,’’ என காம்பிர் தெரிவித்தார்.

இங்கிலாந்தின் லண்டனில் வரும் மே 30ம் தேதி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. இந்தியா, ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 10 அணிகள் களமிறங்குகின்றன.

இந்த அணிகள் லீக் முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இத்தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் 5ம் தேதி தென் ஆப்ரிக்காவை (சவுத்தாம்ப்டன்) சந்திக்கிறது. இதில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் காம்பிர் கூறியது:

இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் கூடுதல் உதவி தேவைப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் நான்காவதாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் இடம் பெற்றிருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர் என இரண்டு வேகப்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்கள்’ அணியில் உள்ளனர் என்றாலும் இது போதாது என்று தான் தெரிகிறது.

சிறந்த முறை

வரும் உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் விளையாட உள்ளதால், இத்தொடர் சிறப்பாக இருக்கும். இது உண்மையான உலக சாம்பியனை நமக்குத் தரும். வரும் உலக கோப்பை தொடர்களிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) இதே முறையை பின்பற்ற வேண்டும்.

அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் முன்னேறும். இந்தியா தவிர, ஆஸ்திரேலிய அணியிலும் சிறப்பான பவுலர்கள் உள்ளனர். இதேபோல நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டிகளும் விறுவிறுப்பை தரும்.

இவ்வாறு காம்பிர் கூறினார்.

About இனியவன்

x

Check Also

உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் கனவு யாருக்கு நிஜமாகும்?

இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி  இன்று(14) நடைபெறவுள்ளது. முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ளன. ...

%d bloggers like this: