Home / உள்நாட்டு செய்திகள் / உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் பேராயரின் சந்தேகம்!!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் பேராயரின் சந்தேகம்!!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளினால், தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தொடர்பில் உரிய முறையில் தகவல்கள் வெளிப்படுத்தப்படுமா? என்ற சந்தேகம் எழுவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அக்மீமனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தின் பிரதிபலனாகும்.

இது இலங்கையில் திட்டமிடப்பட்ட செயற்பாடா? அல்லது வெளிநாட்டில் திட்டமிடப்பட்டதா? என்பது தொடர்பில் குறிப்பிட முடியாது.

ஏனெனில் விசாரணை அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

இந்த நிலையில், விசாரணைகள் தொடர்பில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதால், சிலநேரங்களில் அது உரிய முறையில் இடம்பெறுமா? என்ற சந்தேகம் எழுவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மரண தண்டனை தொடர்பில் மகிந்தவின் தெரிவித்துள்ள கருத்து..!!

மரண தண்டனை அவ்வாறே பேணப்படும் என்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ...

%d bloggers like this: