Home / உள்நாட்டு செய்திகள் / உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – கைதான 78 பேரில் 20 பேர் நேரடி தொடர்பு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – கைதான 78 பேரில் 20 பேர் நேரடி தொடர்பு!!

கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேர் தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த 20 பேரிடமும் தற்போது விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைதானவர்களிடம் பெறப்படும் தகவல்களுக்கு அமைய மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதல்கள் காரணமாக 250இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்த நிலையில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து முப்படையினரும் இணைந்து நாடு முழுவதிலும் மேற்கொள்ளும் சுற்றிவளைப்புகளில் தாக்குதல்களுடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் அன்றாடம் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

தாக்குதல்களுடன் தொட்ர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரையில்  78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: