Home / உள்நாட்டு செய்திகள் / உயர்தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு!!

உயர்தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சைகள் அனைத்தையும் இன்று (30) நள்ளிரவுடன் நிறைவுசெய்ய வேண்டும் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைய பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

அதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் அனைத்தும் இன்று (30) நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளன.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அதற்கு பின்னர் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகள் நடாத்தப்படும் பட்சத்தில் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 5ஆம் திகதி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

அதேநேரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 4 ஆம் திகதி நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம்…!!

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் ...

%d bloggers like this: