Home / உள்நாட்டு செய்திகள் / உதயமாகிறது முதலமைச்சரின் தனி அணி!

உதயமாகிறது முதலமைச்சரின் தனி அணி!

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தனி அணியாக செல்வதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டதாக நம்பகரமாக அறிந்துள்ளது. உடனடியாக இல்லாவிட்டாலும், அடுத்த சில மாதங்களில் தனி அணி குறித்த அறிவிப்பு பகிரங்கமாகும் என தெரிய வருகிறது.

வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க வேண்டுமென பங்காளிக்கட்சிகள் பகிரங்கமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும், தமிழரசுக்கட்சி இதில் அசைந்து கொடுப்பதாக இல்லை. இந்த நிலையில், முதலமைச்சரின் தனி அணி முயற்சிகள் கிட்டத்தட்ட முழுமையடைந்து விட்டதாக தெரிகிறது.

தனியான கட்சியெதுவும் பதிவுசெய்யப்படாத போதிலும், இருக்கும் கூட்டணிக்கட்சிகளில் ஒன்றினது சின்னத்தில் முதலமைச்சர் அணி தேர்தலை சந்திக்குமென தெரிகிறது.

தற்போதைய நிலையில் மூன்று அணிகள் அந்த கூட்டணியில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அணிகளும், கட்சிகளும் அதில் இணைக்கும் பேச்சுக்கள் நடந்து வருகின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்த சமரச முயற்சியையும் ஏற்று, கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகுவதில்லையென்ற முடிவை முதலமைச்சர் எடுத்துள்ளதாக நம்பகரமாக தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

About இனியவன்

x

Check Also

சிறிலங்கா அதிபரிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தா!

பாதாள உலக குழுத் தலைவர் மாகன்துரே மதுசின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் ...

%d bloggers like this: