Home / உள்நாட்டு செய்திகள் / ஈஸ்டர்  பெருநாள் வாழ்த்துச் செய்­தியில்: ஜனா­தி­பதி

ஈஸ்டர்  பெருநாள் வாழ்த்துச் செய்­தியில்: ஜனா­தி­பதி

உயிர்த்­தெ­ழுந்­ததன்  மூலம் இயேசுபிரான்  மர­ணத்தை  வெற்றி கொண்­ட­தனை குறித்து அனுஷ்­டிக்­கப்­படும் உயிர்த்த ஞாயிறு  தின­மா­னது  உல­கவாழ் கிறிஸ்­தவ  மக்­களால்  ஓர் புனித பண்­டி­கை­யாகக் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது என ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது ஈஸ்டர்  பெருநாள் வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.

ஈஸ்டர்  பண்­டி­கைக்கு  முன்­ன­ரான தவக்­கா­லத்தில்  உண்­ணா­வி­ரதம்  இருந்து, தியா­கங்­க­ளையும் சமய வழி­பா­டு­க­ளையும்  அவர்கள் மேற்­கொள்­கின்­றனர்.

மானிட  வர்க்­கத்­திற்­காக தமது உயிரை நீத்த இயேசு  பிரான், மர­ணத்தின் போது அனு­ப­வித்த  வேத­னை­களை நினை­வு­கூ­ரு­வதன் மூலம் வேதனை  கொள்­வ­தையும்  இயே­சு­பிரான் உயிர்த்­தெ­ழுந்­ததன் மூலம்  அந்த பக்­தர்­களின்  மனதில் ஏற்­படும் மன மகிழ்ச்­சி­யையும் ஈஸ்டர்  பண்­டிகை வெளிப்­ப­டுத்­து­கின்­றது.

அதன் மூலம் மர­ணத்தில் காணப்­ப­டு­கின்ற இம்­சை­யையும்,  குரோ­தத்­தன்­மை­யையும் கடந்து  மர­ணத்­தி­லி­ருந்து  உயிர்த்­தெ­ழுந்து வாழ்க்­கை­யினைப் பற்றிக் கொள்­வதன் அபூர்­வ­மான  மகிழ்ச்­சியை  ஈஸ்டர் பண்­டிகை   வெளிப்­ப­டுத்­து­கின்­றது. அத்­தோடு  தெய்­வீகத்  தியா­கத்தைப் பற்­றிய  ஒப்­பற்ற  அர்ப்­ப­ணிப்­பையும் ஈஸ்டர்  திருநாள்  வெளிப்­ப­டுத்­து­கின்­றது.

எல்லா உயி­ரி­னங்­களும்  இம்­சித்தல் மற்றும் தாக்­கங்­க­ளுக்கு உட்­ப­டுத்­து­தலை வெறுக்­கின்­றன.  சக­ல­வித  தோற்­றங்­களும்  உயிர்ப்­பினில்  இருந்தே  பிறக்­கின்­றன.  ஒவ்­வொ­ரு­வ­ருக்கும்  எதி­ராக  ஏந்­தப்­படும்   சக­ல­வித  ஆயு­தங்­களும் தீமையின் கட்­ட­ளை­யி­னா­லேயே  எழு­கின்­றன. அதனால்  அவற்றுள்   குரோ­தத்­தி­னதும் வைராக்­கி­யத்­தி­னதும்  தீச்­சு­வா­லையே  தேங்­கி­யி­ருக்­கின்­றன.

இந்த உல­மா­னது  பாசமும்,  அந்­நி­யோன்ய  பிணைப்பும் கௌர­வமும், நல்­லி­ணக்­கத்தை  நேசிக்கும் மனி­தர்­க­ளி­னா­லேயே அழகு பெறு­கின்­றது. அத்­த­கை­யதோர் சுவர்க்­கத்­தினை நோக்­கிய  பாதையை  உயிர்த்த ஞாயிறு  தினமே  திறந்து  வைக்­கின்­றது. அவ்­வ­ழியில்  பய­ணிப்­பதன் மூலம்  புதி­யதோர் உலகைக் காணு­வ­தற்கும் மானி­டத்­து­வத்தைப் பற்றி மீள சிந்தித்துப் பார்ப்பதற்கும் இந்த  ஈஸ்டரின்  போது  நாம் அனைவரும்  உறுதி கொள்வோமாக!

சகல கிறிஸ்தவ  பக்தர்களுக்கும் அர்த்தமுள்ள, சமாதானமான ஈஸ்டர்  தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

About இனியவன்

x

Check Also

பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள போதநாயகியின் கடைசி வரிகள்!!

காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரும், ஈழத்து கவிஞர் வன்னியூர் செந்தூரனின் ...

%d bloggers like this: