Home / உலகச் செய்திகள் / ஈரானுக்கு இறுதிக்காலம் நெருங்கி விட்டது : டிரம்ப் ஆவேசம்!!

ஈரானுக்கு இறுதிக்காலம் நெருங்கி விட்டது : டிரம்ப் ஆவேசம்!!

வாஷிங்டன்,:”அமெரிக்காவுடன் சண்டையிட நினைத்தால், அதுவே ஈரானின் முடிவாக இருக்கும்,”’ என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபராக, டொலான்டு டிரம்ப் பதவியேற்ற பின், மத்திய கிழக்கு நாடான, ஈரானுக்கு எதிராக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.

ஈரான் மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், வளைகுடா கடல் பகுதிகளில், அமெரிக்க போர் கப்பல்களை, அதிபர் டிரம்ப் நிறுத்தி உள்ளார்.உலகின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளுக்கு பயணம் செய்ய, வளைகுடாவின் வான்வழி, முக்கிய வழித்தடமாக உள்ளது. எனவே, அவ்வழித்தடங்களில் பயணம் செய்யும் விமானங்களுக்கு, அமெரிக்கா, எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதற்கு பதிலடியாக, ‘அணுசக்தி ஒப்பந்த விதிமுறைகளை கடைபிடிக்கப் போவதில்லை’ என, ஈரானும் மிரட்டல் விடுத்துள்ளது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் மீது, ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கு இடையே, போர் பதற்றம் உருவாகி உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:எங்களுடன் சண்டையிட நினைத்தால், அதுவே ஈரானின் முடிவாக இருக்கும். அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்த முடியாது. இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ராணுவ மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு-10 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ மருத்துமனையில் ஏற்பட்ட பயங்கர  குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவால் தேடப்படும் ஜெய்ஷே ...

%d bloggers like this: